ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இலங்கை அணி

தினகரன்  தினகரன்

ஜீலாங் : பரபரப்பான  2வது டி20 போட்டியில்  ஆஸ்திரேலியா அணியை இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம்  டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி. ஜீலாங்கில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் உபுல் தாரங்க முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. 173 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 176 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் குணரத்னா அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். பரபரப்பான  நடைபெற்ற இப்போட்டியில் கடைசி ஓவரில் 14ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்து இலங்கை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை