பொது இடத்தில் மனைவியை அசிங்கப்படுத்திய ட்ரம்ப்!

PARIS TAMIL  PARIS TAMIL
பொது இடத்தில் மனைவியை அசிங்கப்படுத்திய ட்ரம்ப்!

 விமானத்தில் இறங்கிய டொனால்டு ட்ரம்ப் மனைவி மெலேனியாவுக்கு காத்திருக்காமல் தனியே காரில் ஏறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் Florida மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தற்போது தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.
 
அவருடன் அவர் மனைவி மெலேனியாவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நேற்று இருவரும் விமானத்தின் படியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மெலோனியாவுக்கு காத்திருக்காமல் ட்ரம்ப் வேகமாக படியிலிருந்து இறங்கி அங்கு நின்றிந்த காரில் ஏறி கொண்டார்.
 
பின்னால் வந்த மெலேனியா அதன் பின்னர் காரில் ஏறினார்.
 
சாதரணமாக ஒபாமா போன்ற முன்னாள் ஜனாதிபதிகள் அமெரிக்காவின் முதல் பெண்ணாக இருக்கும் தங்கள் மனைவிக்கு சமமான மரியாதை கொடுப்பார்கள். அவர்களுடன் கை கோர்த்து இணைந்தே ஒன்றாக நடப்பார்கள்.
 
ஆனால் ட்ரம்ப் இப்போது மட்டுமல்லாமல் பதவியேற்பு தினத்தன்று கூட தன் மனைவி மெலேனியாவை மதிக்காமல் தனியாக வந்தது அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை