ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் உடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் சென்றுள்ளனர். 

மேலும் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, அதிமுக எம்.பி.மைத்ரேயனும் ஆளுநரை சந்தித்து வருகின்றனர். பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது.

அப்போது ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த திமுக-வினர், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ரகசிய வாக்கெடுப்பு, மக்களை சந்தித்து விட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை திமுக தரப்பினரும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினரும் முன் வைத்தனர்.

ஆனால், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதனை கொண்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனநாயகத்துக்கு விரோதமாக, எம்.எல்.ஏ.,க் களை அடைத்து வைத்து, ஓட்டெடுப்பு நடத்தியது செல்லாது என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார். இதுகுறித்து இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

மூலக்கதை