போன் போட்டு குடும்பத்தை திட்டுகிறார்கள்.. புலம்பும் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போன் போட்டு குடும்பத்தை திட்டுகிறார்கள்.. புலம்பும் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன்!

கோவை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு பஞ்சாயத்தெல்லாம் முடிந்துவிட்ட பின்னர், ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள் என்று போன் போட்டு மிரட்டுவதாக கோவை தெற்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன் புகார் தெரிவித்துள்ளார்.

நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து எம்எல்ஏக்கள் 10 நாட்களுக்கு பிறகு தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன் செய்தியாளர்களிடம் தான் மிரட்டப்படுவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

கூவத்தூரில் நான் 10 நாட்கள் இருந்தாலும் தொகுதி மக்களுடன் தொடர்பில் இருந்தேன். மக்களுக்கு தேவையான அனைத்துப் பணிகளை செய்தேன். நேற்று சட்டமன்றத்திற்கு சென்று வாக்களித்தேன். அந்த நேரத்திலும் என் பணிகளை நான் செய்திருக்கிறேன். இப்போது தொகுதிக்கு வந்து விட்டோம். அவர்களை சந்தித்து தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்.

பல நேரங்களில் எனக்கு மர்ம போன்கள் வருகின்றன. எடுத்து பேசினால், ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள் என்று மிரட்டுகிறார்கள். அசிங்கமாக என் குடும்பத்தை இழுத்து திட்டுகிறார்கள். என் குடும்பத்தை ஏன் இழுக்க வேண்டும். திரும்ப அதே எண்ணுக்கு போன் செய்தால் சுட்ச் ஆப் என்று வருகிறது. தொடர்ந்து இதே போன்ற போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நாங்கள் எப்படி ஓபிஎஸ்ஸை ஆதரிக்க முடியும். பன்னீர்செல்வத்தை ஆதரித்தால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நிலைத்திருக்காது. இதுகுறித்து புகார் அளிக்க உள்ளேன் என்று அம்மன் அர்ஜீனன் கூறியுள்ளார்

மூலக்கதை