சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் வேலைக்காரன்

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் படத்துக்கு வேலைக்காரன் என்று பெயர் வைத்துள்ளனர். வேலைக்காரன்  ரஜினி நடிப்பில் 1987 -இல் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிவகார்த்திகேயன் படத்துக்கு வேலைக்காரன் என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாக நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம்.

அதேபோல் வேலைக்காரன் என்ற பெயரையே வைத்துள்ளனர். நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பெயர் அறிவிக்கப்பட்டது.   24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வளர்ந்துவரும் இந்தப் படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா  நடிக்கிறார்.

மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடமேற்றுள்ளார்.

அவர் நடிக்கும் முதல் படம் இது.   வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1 தொழிலாளர் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

.

மூலக்கதை