நம்பிக்கை ஓட்டெடுப்பு; வெளுத்து வாங்கிய 'நெட்டிசன்'கள்

தினமலர்  தினமலர்
நம்பிக்கை ஓட்டெடுப்பு; வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

'இனி சட்டம், பெங்களூருவில் இருந்து, தன் கடமையை செய்யும்' என, சமூக வலைதளங்களில், 'நெட்டிசன்'கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து, சமூக வலைதளங்களில் வெளியான, 'கமென்ட்ஸ்'

* இந்த நேரம் பார்த்து, சபையில கேப்டன் இல்லாம போய்ட்டாரே!
* போதுமடா சாமி... ரீலு அந்து போச்சி
* இரண்டாவது சபதம் சக்சஸ்?
* சட்டை கிழிப்பு சபைன்னு மாத்திக்கலாமா?
* ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., - எம்.கே.எஸ்., இதில் யாருக்கும் வெற்றியல்ல, யு.பி.எஸ்., 122 பேருக்கும் கிடைத்த செல்வத்துக்கே வெற்றி
* தமிழக சட்டசபை, இவ்வளவு எனர்ஜெட்டிக்கா இயங்கி, இப்பதான் பாக்குறோம், யாரும் துாங்கி வழியல...
* அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதியில் அமோக வரவேற்பு காத்திருக்கு
* இதுக்கு ரிசார்ட்டையே சட்டசபையா மாத்தி, சிம்பிளா வேலைய முடிச்சிருக்கலாம்...
* நம்பிக்கையை வெளியேற்றிய வாக்கெடுப்பு...
* இனி சட்டம், பெங்களூரு ஜெயிலில் இருந்து, தன் கடமையைச் செய்யும்
* சட்டமும், சட்டையும் கிழிந்தது
* இன்னிக்கு மட்டும் ஆன்மா யாரிடமும் பேசவில்லை
* மீண்டும் குட்டையில் விடப்பட்டன, 122 மீன்கள்; இனி மக்கள் என்ற புழுக்கள் அவ்வளவு தான்
* நரி பரியான விந்தை, மக்களின் மந்திரத்தால் அல்ல, சொக்கனின் தந்திரத்தால்...
* ஜனநாயகமும், மாண்பும் குழி தோண்டி புதைப்பு
* எண்ணம் இருந்தும், ஆண்டவனால் காப்பாற்ற முடியவில்லை; எண்ணிக்கை இருந்ததால், கவர்னரால் காப்பாற்ற முடியவில்லை
* சட்டசபை கதவுகள் மூடப்பட்டதும், மனசாட்சியின் கதவுகளும் மூடப்பட்டன
* நாம் செய்த தவறுக்கு, நாம் தானே பொறுப்பு...
* குரங்குகள் என்றால், சேட்டை செய்யும் தானே...
* குரல் வாக்கெடுப்பில், பல குரல் மிமிக்ரி பண்ணி ஜெயிச்சுட்டாங்களாம் பா...
* நம்ம குமாரசாமி கணக்கு தான், எப்பவும் ஜெயிக்குது...
* கவர்னர் அய்யா, நீங்களும் நம்பிட்டீங்களா, ரொம்ப நல்லவரு நீங்க...
* ரிசார்ட்டுலயும் பூட்டி வச்சாங்க, சட்டசபையிலயும் பூட்டி வச்சாங்க... ஓட்டு கேட்க மட்டும் வெளிய வரணுமா...
* தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்த ஓட்டெடுப்பு
* கோட்டைக்கு மாறிய கூவத்துார், அங்கே கட்சி நிதி, இங்கே மக்கள் நிதி. மொத்தத்தில் கதவடைப்பு, குண்டர்கள் பாதுகாப்பு. மக்களின் நம்பிக்கை தகர்ப்பு
* இனி பெங்களூருக்கு, கோட்டையிலிருந்து, 'பை - பாஸ்' போடுறது தான் முதல் திட்டம். அப்பப்போ அங்கேயிருந்து ஆன்மா பேசும்
* பெட்டி வைக்காம கருத்து கேட்டவங்க, சிங்கமா நின்னாங்க... ஆனா, மக்கள் கருத்தை, 'பொட்டியா' வாங்குன, புரட்சி எம்.எல்.ஏ., எங்கய்யா...
* 4.25 கோடி பேர் அமைதியா வாக்களிக்கும் போது, 234 பேரால ஏன் முடியலை?
* இனி நாம மிக்சர் சாப்பிடலாம்.

- நமது நிருபர் -

மூலக்கதை