மகிந்­திரா அண்ட் மகிந்­திரா 7 வாக­னங்கள் அறி­முகம்

தினமலர்  தினமலர்
மகிந்­திரா அண்ட் மகிந்­திரா 7 வாக­னங்கள் அறி­முகம்

புது­டில்லி : மகிந்­திரா நிறு­வனம், பய­ணிகள் மற்றும் வர்த்­தக வாக­னங்கள் பிரிவில், ஏழு புதிய வாக­னங்­களை அறி­முகம் செய்­துள்­ளது. இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், வாடிக்­கை­யாளர் விரும்பும் வகையில், வாக­னங்­களை அறி­முகம் செய்து வரு­கி­றது. தற்­போது, நான்கு பய­ணிகள் வேன் மற்றும் மூன்று வர்த்­தக வாக­னங்கள் என, மொத்தம், ஏழு வாக­னங்­களை அறி­முகம் செய்­துள்­ளது. ‘சுப்ரோ’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள சிறிய வேனின் விலை, 4.71 லட்சம் ரூபாய் என்­ற­ளவில் உள்­ளது. சுப்ரோ மினி டிரக் என்ற வாக­னத்தின் விலை, 4.28 லட்சம் ரூபா­யாக உள்­ளது. ஏழு புதிய வாக­னங்­களும், நவீன தொழில்­நுட்­பத்தில், அழ­கிய வடி­வ­மைப்பில் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன. அவற்றின் விலையும், வாங்கும் அளவில் உள்­ளது. இதன் மூலம், எங்கள் நிறு­வ­னத்தின் புதிய வாக­னங்­களை வாடிக்­கை­யா­ளர்கள் அதி­க­ளவில் வாங்­குவர். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை