வரி செலுத்­தாமல் ஏய்க்கும் சொகுசு விடு­திகள் நட­வ­டிக்கை எடுக்க ஓட்டல் துறை கோரிக்கை - பார­பட்ச கொள்­கையால் பாதிப்பு

தினமலர்  தினமலர்
வரி செலுத்­தாமல் ஏய்க்கும் சொகுசு விடு­திகள் நட­வ­டிக்கை எடுக்க ஓட்டல் துறை கோரிக்கை  பார­பட்ச கொள்­கையால் பாதிப்பு

மும்பை : ‘ஓட்­டல்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள விதி­மு­றை­களை, சொகுசு விடு­திகள், குறு­கிய காலத்­திற்­கான, வாடகை குடி­யி­ருப்­புகள் ஆகி­ய­வற்­றுக்கும் அமல்­ப­டுத்த வேண்டும்’ என, மத்­திய அர­சுக்கு, ஓட்டல் மற்றும் ரெஸ்­டாரென்ட் கூட்­ட­மைப்பின் மேற்கு இந்­திய பிரிவு கோரிக்கை விடுத்­துள்­ளது. இது குறித்து, இக்­கூட்­ட ­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை:அமைப்பு சார்ந்த ஓட்டல் துறையில், ஓர் உண­வகம், தங்கும் விடுதி ஆகி­ய­வற்றை துவக்­கவும், வர்த்­தகம் புரி­யவும், 42க்கும் அதி­க­மான உரி­மங்கள் பெற வேண்­டி­யுள்­ளது. ஒரு ரூபாய் கூடஆனால், அமைப்பு சாரா துறையில், ஓர் உரிமம் கூட இல்­லாமல், சொகுசு விடு­தி­களை நடத்­து­வது; உணவு வச­தி­யுடன் அறை­களை வாட­கைக்கு விடு­வது ஆகி­ய­வற்றின் வர்த்­தகம், ஜோராக நடை­பெற்று வரு­கி­றது. தற்­போது, நாடு முழு­வதும், ஏரா­ள­மான சொகுசு விடு­திகள் பெரு­கி­யுள்­ளன. அது போல, சுற்­றுலா பய­ணிகள், குறு­கிய காலம் தங்கிச் செல்லும் வசதி கொண்ட குடி­யி­ருப்­பு­களும், புற்­றீசல் போல் பெருகி வரு­கின்­றன. இவை, அமைப்பு சார்ந்த ஓட்­டல்­க­ளுக்­கான விதி­மு­றை­களை பின்­பற்­று­வ­தில்லை என்­பதால், தங்கும் அறை­க­ளுக்கு மிகக் குறை­வான வாடகை வசூ­லிக்­கின்­றன.இதன் கார­ண­மாக, சொகுசு விடு­திகள், விருந்­தினர் குடில்கள், பண்ணை வீடுகள் போன்­ற­வற்றில் தங்க, சுற்­றுலா பய­ணி கள் விரும்­பு­கின்­றனர். இங்கு, உணவு, மது உட்­பட, ஓட்­ட லில் வழங்­கப்­படும் அனைத்து வச­தி­களும் கிடைக்­கின்­றன. ஐந்து நட்­சத்­திர ஓட்­டல்கள், அவற்றின் வாட­கையில், 38 சத­வீ­தத்தை, வரி­யாக, நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும், அர­சுக்கு செலுத்தி வரும் நிலையில், சொகுசு விடு­திகள், ஒரு ரூபாய் கூட வரி செலுத்­தாமல், வர்த்­தகம் செய்­கின்­றன. வரி வருவாய்இத்­த­கைய சொகுசு விடு­திகள், தங்கும் அறைகள் உள்­ளிட்­ட­வற்றின் விப­ரங்­களை வழங்கி, வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்கும் வலை­தள நிறு­வ­னங்கள் வாயி­லா­கவும், அர­சுக்கு வரி வருவாய் கிடைப்­ப­தில்லை. அமைப்பு சார்ந்த ஓட்­டல்கள், அவற்றின் அறை­களில் தங்கும் வெளி­நாட்டு பய­ணிகள் குறித்த விப­ரங்­களை, அருகில் உள்ள காவல் நிலை­யத்­திற்கு தெரி­விக்க வேண்டும் என, விதி­முறை உள்­ளது. ஆனால், இது போன்ற தக­வல்­களை, சொகுசு விடு­தி கள், பண்ணை இல்­லங்கள் போன்­றவை, போலீ­சா­ருக்கு வழங்­கு­வ­தில்லை. அச்சுறுத்தல்தங்­களை பற்­றிய விப­ரங்­களை தெரி­விக்க விரும்­பாத அன்­னி­யர்கள், சொகுசு விடு­தி­களை நாட, இதுவும் ஒரு கார­ண­மாகும். இது, உள்­நாட்டு பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான அம்­ச­மா­கவும் உள்­ளது. ஆகவே, எந்­த­வொரு சட்டத் திட்­டங்­க­ளுக்கும் உட்­ப­டாமல், வரி செலுத்­தாமல் செயல்­படும், சொகுசு விடு­திகள், குடி­யி­ருப்­புகள், பண்ணை இல்­லங்கள் ஆகி­ய­வற்­றுக்கு உரிய விதி­மு­றை­களை வகுக்க வேண்டும். அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா ஓட்டல் துறைகள் பின்­பற்றும் வகையில், பார­பட்­ச­மற்ற கொள்­கையை, மத்­திய அரசு உரு­வாக்க வேண்டும். இதன் மூலம், ஓட்டல் துறை சீரான வளர்ச்சி காணும்; அர­சுக்கும் குறிப்­பி­டத்­தக்க வரி வருவாய் கிடைக்கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

மூலக்கதை