பெட்டிங்கில் தோற்றதால் டேட்டிங்வாக்கை காப்பாற்றிய பவுச்சார்டு

தினகரன்  தினகரன்

இந்த 22 வயது அழகு தேவதை, டென்னிஸ் களத்தில் விளையாடும் நேரம் தவிர்த்து டிவிட்டரும் கையுமாகவே அலைகிறார். காலையில் எழுந்து ஜாகிங் போவது முதல், பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது வரை சகட்டுமேனிக்கு புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அப்லோடு செய்யும் இந்த ‘செல்பி புள்ள’, ரசிகர்களின் ஏடாகூடமான கேள்விகளுக்கு துணிச்சலாக பதில் சொல்லவும் தவறுவதில்லை. இதனால் பாலோவர்களை அள்ளிக் கொண்டிருக்கும் பவுச்சார்டு, தேவையில்லாமல் ஒரு ரசிகருடன் பெட் கட்டி தோற்றதால் டேட்டிங் போக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.அமெரிக்காவில் நடக்கும் பிரபல என்.பி,ஏ கூடைப்பந்து போட்டித் தொடரில் பேட்ரியாட் - அட்லான்டா அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அட்லான்டா அணி 21-0 என முன்னிலை வகித்ததால் அந்த அணி நிச்சயமாக ஜெயிக்கும் என்று உறுதியாக நம்பினார் பவுச்சார்டு. மிசோரி பல்கலை. மாணவரான ஜான் கோயர்கே (20 வயது), பேட்ரியாட் அணியின் தீவிர ரசிகர். எப்படியும் பேட்ரியாட் தான் வெற்றி பெறும் என்று அடித்துச் சொன்னார். ஆட்டத்தை பார்த்தபடியே டிவிட்டரில் கதைத்துக் கொண்டிருந்த பவுச்சார்டால் பொறுக்க முடியவில்லை. பெட்டா? அட்லான்டா ஜெயிக்குது... என்று வம்புக்கு இழுத்தார். ஜான் கோயர்கேவும் பின்வாங்குவதாக தெரியவில்லை. பேட்ரியாட் ஜெயித்தால் என்னுடன் ஒருநாள் முழுவதும் டேட்டிங் செய்ய வேண்டும் என்று பந்தயத்துக்கு அழைத்தார். நம்ம டீம் தான் 21 பாயின்ட் லீட் வச்சிருக்காங்களே, எதுக்கு தயங்கனும் என்று பவுச்சார்டும் துணிச்சலாக பெட் கட்டினார். ஆனால், யாருமே நம்ப முடியாத வகையில் அபாரமாக விளையாடிய பேட்ரியாட் அணி தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 34-28 என்ற கணக்கில் அட்லான்டாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டது. துள்ளிக் குதித்த கோயர்கே டேட்டிங் எப்போ என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். டோன்ட் வொரி... நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்று டயலாக் விட்ட பவுச்சார்டு, ஜான் கோயர்கேவுடன் இணைந்து ஒருநாள் முழுவதும் ஊர் சுற்றி கொடுத்த வார்த்தையை காப்பாற்றி இருக்கிறார். அது மட்டுமல்ல, அந்த புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால், ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அதே சமயம், இனிமேல் யாருடனும் பெட் கட்ட மாட்டேன் என்கிறார் உஷாராக. ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் இதழில் நீச்சலுடையுடன் போஸ் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை ‘டாப்லெஸ்’ படத்துடன் கொண்டாடும் பவுச்சார்டு உண்மையிலேயே வித்தியாசமானவர் தான்.

மூலக்கதை