தமி­ழ­கத்தில் முத­லீடு செய்ய ஜெர்­மனி நிறு­வ­னங்கள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
தமி­ழ­கத்தில் முத­லீடு செய்ய ஜெர்­மனி நிறு­வ­னங்கள் ஆர்வம்

சென்னை : ஜெர்­மனி துணை துாதர் அச்சிம் பேகிக், தமி­ழக பொறுப்பு கவர்னர் வித்­யா­சாகர் ராவை சந்­தித்து பேசினார். இது குறித்து, கவர்னர் மாளிகை வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­தி­யாவைச் சேர்ந்த, ஏரா­ள­மான தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள், ஜெர்­ம­னியில் முத­லீடு செய்­துள்­ளன. அது போல, ஜெர்­மனி நிறு­வ­னங்­களும், இந்­தி­யாவில் பல்­வேறு துறை­களில் முத­லீடு செய்­துள்­ளன. குறிப்­பாக, தமி­ழ­கத்தில், வாகனத் துறையில், ஜெர்­மனி நிறு­வ­னங்கள், குறிப்­பி­டத்­தக்க முத­லீ­டு­களை மேற்­கொண்­டுள்­ளன. இந்­தி­யாவில், குறிப்­பாக, தமி­ழ­கத்தில் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க, ஜெர்­மனி நிறு­வ­னங்கள் ஆர்­வ­மாக உள்­ளன. புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி, பசுமை தொழில்­நுட்­பங்கள், கல்வி பரி­வர்த்­தனை திட்­டங்கள் ஆகி­ய­வற்றில், முத­லீடு செய்ய, ஜெர்­மனி நிறு­வ­னங்கள் விரும்­பு­கின்­றன என, அச்சிம் பேகிக் தெரி­வித்தார். ஜெர்­ம­னியின், ‘சகோ­தரி நகரம்’ திட்­டத்தில், கர்­நா­டகா, மஹா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லங்கள் இணைந்­தது போல, தமி­ழ­கமும் இணைய, மாநில அர­சுடன் கலந்­தா­லோ­சித்து முடிவு செய்­யப்­படும் என, கவர்னர் தெரி­வித்தார். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை