பஜாஜ் எலக்ட்­ரிக்கல்ஸ் நிறு­வனம் விற்­று­முதல் ரூ.4,600 கோடி

தினமலர்  தினமலர்
பஜாஜ் எலக்ட்­ரிக்கல்ஸ் நிறு­வனம் விற்­று­முதல் ரூ.4,600 கோடி

புது­டில்லி : பஜாஜ் எலக்ட்­ரிக்கல்ஸ், கடந்த நிதி­யாண்டில், 4,600 கோடி ரூபாய் விற்­று­மு­தலை ஈட்­டி­யுள்­ளது.பஜாஜ் எலக்ட்­ரிக்கல்ஸ் ­நி­று­வனம், வரும் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் விற்­று­முதல் ஈட்ட திட்­ட­மிட்­டு உள்­ளது. இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:கடந்த, 2016 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், எங்கள் நிறு­வனம், 29.71 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 17.47 சத­வீதம் அதிகம். இதே காலத்தில், மொத்த வருவாய், 7.05 சத­வீதம் குறைந்து, 1,055.09 கோடி ரூபா­யாக உள்­ளது. கடந்த நிதி­யாண்டில், பஜாஜ் எலக்ட்­ரி­க்கல்சின் விற்­று­முதல், 4,600 கோடி ரூபாய் என்­ற­ளவில் உள்­ளது. இது, வரும் நிதி­ஆண்டில், 5,000 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. மத்­திய அரசின் செல்­லாத நோட்டு அறி­விப்பு; எல்.இ.டி., பல்பு விற்­பனை சரிவு போன்ற கார­ணங்­களால், கடந்த காலாண்டில், நிறு­வ­னத்தின் செயல்­பாடு மந்­த­மாக இருந்­தது. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை