10ம் வகுப்பு மாணவர்களுக்கு...இன்று! ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு பூஜைச

தினமலர்  தினமலர்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு...இன்று! ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு பூஜைச

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், இன்று ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை நடைபெறவுள்ளது.
கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு குருவானவர் ஹயக்ரீவர். திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவராக, தனி சன்னதில் எழுந்தருளியுள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், மிகுந்த நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளவும், சிறப்பான தேர்ச்சி பெறவும், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் சிறப்பு யாகம், அபிஷேக பூஜைகள் நடக்கிறது.
அவ்வகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை, இன்று நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு வேள்வி; 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம்; 11:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம்; 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை; 12:00 மணிக்கு, பிரசாத வினியோகம் நிகழ்ச்சி நடக்கிறது.
யாக பூஜை, சிறப்பு அபிஷேகம், நாம சங்கீர்த்தனம் உள்ளிட்டவை நடக்கிறது. "தினமலர்' நாளிதழில் வெளியான கூப்பனை பூர்த்தி செய்து கொண்டு வந்து, 10ம் வகுப்பு மாணவர்கள், இதில் பங்கேற்கலாம். இன்று காலை, 9:00 மணிக்குள், மாணவர்கள் கோவிலில் இருக்க வேண்டும்.
பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட எழுது பொருட்கள் அடங்கிய பாக்ஸ், பிரசாதம், கயிறு உள்ளிட்டவை, மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என்று, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை