சிறிய நக­ரங்­களில் ‘பைக்’ விற்­பனை ஹார்லி டேவிட்சன் நிறு­வனம் திட்டம்

தினமலர்  தினமலர்
சிறிய நக­ரங்­களில் ‘பைக்’ விற்­பனை ஹார்லி டேவிட்சன் நிறு­வனம் திட்டம்

பனாஜி : இந்­தி­யாவில், சூப்பர் பைக்­குகள் சந்­தையில், 60 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்ள, ஹார்லி டேவிட்சன் நிறு­வனம், அதன் வாகன விற்­ப­னையை, சிறிய நக­ரங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டுள்­ளது. இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் மார்க்­கெட்டிங் பிரிவின் இயக்­குனர் பல்­லவி சிங் கூறி­ய­தா­வது:நிறு­வ­னத்தின் மோட்டார் சைக்­கிள்­க­ளுக்கு, ஏற்­க­னவே, பெரிய நக­ரங்­களில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இதை­ய­டுத்து, வாகன விற்­ப­னையை, சிறிய நக­ரங்­க­ளுக்கும் விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்ளோம். நிறு­வ­னத்­திற்கு, நாடு முழு­வதும், 26 முக­வர்கள் உள்­ளனர். இந்த எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முடிவு செய்­துள்ளோம். வரும் நிதி­யாண்டில், சிறிய நக­ரங்­க­ளுக்கு விற்­ப­னையை விரி­வாக்கம் செய்­வதன் மூலம், முழு திற­மையை வெளிப்­ப­டுத்தி, வளர்ச்­சியை தக்க வைத்துக் கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, பாது­காப்­பான பய­ணத்தை வழங்­கு­வதே, எங்­க­ளு­டைய ஒரே குறிக்­கோ­ளாகும். இவ்­வாறு அவர் கூறினார்.நாடு முழு­வதும், 2016ல், இந்­நி­று­வனம், 4,241 சூப்பர் மோட்டார் சைக்­கிள்­களை விற்­பனை செய்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை