துணை தலைவர் கைதால் தடுமாறும் 'சாம்சங்' நிறுவனம்

தினமலர்  தினமலர்
துணை தலைவர் கைதால் தடுமாறும் சாம்சங் நிறுவனம்


ஹாங்காங், எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பில் ஜாம்பவான் நிறுவனமான, சாம்சங்கின் துணைத் தலைவர், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், முறையான வழிகாட்டுதல் இன்றி, அந்த நிறுவனம் தடுமாறி வருகிறது.மொபைல் போன், 'டிவி' உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பில், உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, தென் கொரியாவைச் சேர்ந்த, சாம்சங்கின் துணைத் தலைவர், ஜேய் ஒய் லீ, 48, அந்நாட்டு அதிபர், பார்க் குன் ஹைக்கு, லஞ்சம் தந்த வழக்கில்,
சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.லீ, கைது செய்யப்பட்டபோதும், அவர் பதவிக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. இருப்பினும், அவரது நேரடி உத்தரவுகள் இன்றி, சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகம் தடுமாறத் துவங்கி உள்ளது. நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பங்களால், நிர்வாகக் குழுவில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தை உருவாக்கிய குடும்பத்தின் தற்போதைய நேரடி வாரிசாக, லீ விளங்குகிறார். ஊழல் குற்றச்சாட்டிற்காக, சாம்சங் நிறுவனத்தில் கைது செய்யப்படும் முதல் நபர், லீ.
இந்த நிறுவனத்தின் மூன்று முக்கிய பிரிவுகளை நிர்வகித்து வரும் மூன்று மூத்த நிர்வாகிகள், கூட்டாக, தலைமை நிர்வாகி என்ற பதவியை வகித்து வருகின்றனர். லீ கைது செய்யப்பட்டதை அடுத்து, சாம்சங் நிறுவனத்தின்பங்குகள், கடந்த சில நாட்களாக சரிவை
சந்தித்து வருகின்றன.

மூலக்கதை