வேட், வார்னர் கிண்டல்

தினகரன்  தினகரன்

ஆஸ்திரேலிய அணியுடனான் பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 85 ரன் விளாசிய இந்தியா ஏ அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் (22 வயது), ஆஸி. விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருவரும் தன்னை கிண்டலடித்து கவனத்தை சிதைக்க முயற்சித்ததாக கூறியுள்ளார்.இது குறித்து ஷ்ரேயாஸ் கூறியதாவது: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது பற்றி தற்சமயம் எதுவும் நினைக்கவில்லை. சிறப்பாக விளையாடி அதிக ரன் குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். நிச்சயம் ஒரு நாள் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். ஆஸி. சுழற்பந்துவீச்சாளர்கள் லியான், ஓ கீப் இருவருக்கு எதிராகவும் சிக்சர் விளாசியது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஷாட்கள் அல்ல. தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தி பீல்டர்களை கலைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அது நன்றாக கை கொடுத்தது. வங்கதேச ஸ்பின்னர்களை விட இவர்கள் சிறப்பாக பந்துவீசுகின்றனர். எனது கவனத்தை சிதைக்கும் வகையில் வேட், வார்னர் இருவரும் கிண்டல் செய்தனர். ‘இவருக்கு அதிரடி ஆட்டம் தான் வரும். பந்தை தடுத்து தற்காப்பாக விளையாடத் தெரியாது’ என்று வார்த்தைப் போருக்கு இழுத்தனர். எனக்கு இது புதிதல்ல. இந்தியா ஏ அணிக்காக ஆஸி. சென்று விளையாடியபோது இதே வகையிலான கேலி, கிண்டலை பார்த்திருக்கிறேன். இவ்வாறு ஷ்ரேயாஸ் கூறியுள்ளார்.

மூலக்கதை