மெரினா காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம்!

PARIS TAMIL  PARIS TAMIL
மெரினா காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம்!

சட்டசபையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அவையில் திமுகவினர் தாக்கபட்டதற்கு எதிரப்பு தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மெரினா காந்தி சில அருகே உண்ணாவிரதம் இருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும்  ஒத்தி வைக்கபட்டது.பின்னர் மீண்டும் கூடிய பொழுதும் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் மீண்டும் சபை மூன்று மணி வரைக்கும் ஒத்திவைக்கபப்ட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக்  கண்டித்து சட்டசபை வளாகத்தில் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.

தன்னுடைய சட்டை பொத்தான்கள் கிழிக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி புகார் கொடுக்க விரைந்தார்.  அங்கே அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் நேராக மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்டாலின் அங்குள்ள காந்தி சிலை அருகே  'திடீர்' உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். அவருடன் அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை