பழ்நி கோவிலில் சாமி கும்பிட்டது விஜய் இல்லையா? ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
பழ்நி கோவிலில் சாமி கும்பிட்டது விஜய் இல்லையா? ...

இளையதளபதி விஜய் நேற்று பழநி கோவிலுக்கு முகத்தை மூடிக்கொண்டு வந்து சாமி தரிசனம் செய்ததாக டுவிட்டர், பேஸ்புக் உள்பட பல சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி வெளிவந்தது.



சென்னையில் படப்பிடிப்பில் உள்ள விஜய் எப்போது பழனிக்கு சென்றார் என்று அனைவரும் ஆச்சரியமாக அந்த புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த புகைப்படத்தில் இருந்தது விஜய் இல்லை என்றும் அவரை போலவே தோற்றமளிக்கும் வேறொருவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படத்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுள்ளது.

விஜய் தற்போது ஈசிஆர் பகுதியில் அட்லியின் இயக்கத்தில் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதுதான் உண்மை.

.

மூலக்கதை