கும்மிடிப்பூண்டியில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக 500 பேர் பேரணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கும்மிடிப்பூண்டியில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக 500 பேர் பேரணி

கும்மிடிப்பூண்டி- தமிழக சட்டசபையில் இன்று நடைபெற இருக்கும் பலப்பரீட்சையில், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவை வலியுறுத்தியும், சசிகலா அணி ஆதரவாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் கும்மிடிப்பூண்டியில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தினர்.
பேரணிக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பி. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், நிர்வாகிகள் புல்லட் கோவிந்தராஜன், முத்துகுமரன், மனோகரன், முன்னாள் கவுன்சிலர்கள் தயாளன், கணபதி, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், ஸ்ரீதர், பாலாஜி, கவுன்சிலர்கள் முருகன், சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி பஜார் வழியே பேரணி வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்களை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

பேரணியில், சட்டமன்றத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். சசிகலாவுக்கு ஆதரவாக கட்சியையும் ஆட்சியையும் பிடிக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
அத்துடன் காணாமல் போன கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்.

விஜயகுமார் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பேரணியில் தீபா பேரவை நிர்வாகிகள் ம. மீ. வேதா, சி. கே. பாபு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை