கூவத்தூரில் 144 தடை உத்தரவு - கீரப்பாக்கம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூவத்தூரில் 144 தடை உத்தரவு  கீரப்பாக்கம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு

கூடுவாஞ்சேரி- சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோயில் தெரு, ஊமை மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் சுமார் 50 ஆண்டு காலமாக குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு இடம், பட்டா மற்றும் வீடு வழங்குதல், குப்பை கிடங்கு அமைக்க அனுமதி மறுப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த பல மாதங்களாக மாவட்ட கலெக்டரை வலியுறுத்தி வருகின்றனர்.



எனினும், இக்கோரிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ம் தேதி விநாயகபுரம் பகுதியில் கீரப்பாக்கம் ஊராட்சி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக, கடந்த 7-ம் தேதி காயார் போலீசாரிடம் அனுமதி கோரினர். காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கடந்த 10 நாட்களாக தங்கியுள்ளதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இக்காரணத்தை காட்டி, கீரப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.


.

மூலக்கதை