இணையதள குற்றங்களை தடை செய்ய கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - இந்துக்கல்லூரி விழாவில் கிரண்பேடி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இணையதள குற்றங்களை தடை செய்ய கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்  இந்துக்கல்லூரி விழாவில் கிரண்பேடி பேச்சு

திருவள்ளூர்- ஆவடியை அடுத்த பட்டாபிராம் டிஆர்பிசிசி இந்துக்கல்லூரியில், “இணையதள குற்றங்கள் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பு” குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி. சேதுராம் தலைமை வகித்தார்.

செயலர் எம். வெங்கடேசபெருமாள், இயக்குனர் என். ராஜேந்திரநாயுடு முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ். கல்பனா பாய் வரவேற்றார்.

திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு, பன்னாட்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

பின்னர் கிரண்பேடி பேசும்போது,”இந்தியா கணினிமயமாகி வருகிறது. நகரத்திற்கு இணையாக கிராமங்களும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்ட வேண்டும்.

இதன் காரணமாக இணையம் சார்ந்த குற்றங்கள் நாட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே இணையதள குற்றங்களை தடை செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். இச்சட்டமும் இணையதளம் மூலம் பணம் இழந்தவர்கள் அப்பணத்தை திரும்ப பெரும் வகையில் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றார்.

கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஐஎஸ்டிஎப்ஆர்எப் துணை தலைவர் கே. ராம சுப்பிரமணியம் விளக்கினார். தொடர்ந்து கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது.

இதில், அறங்காவலர்கள் எம். வி. கண்ணைய செட்டி, சி. வெங்கடாசலம், உம்முடி ஸ்ரீஅரி, டாக்டர் பிரவீன் தெள்ளகுலா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ஆர். திலகராஜ் நன்றி கூறினார்.

.

மூலக்கதை