எமி ஜாக்ஸன் ஆசை நிறைவேறியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
எமி ஜாக்ஸன் ஆசை நிறைவேறியது

கோலிவுட், பாலிவுட்டில் எமி ஜாக்ஸன் மாறி மாறி நடித்து வருகிறார். முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று அவர் படாதபாடு பட்டாலும் அந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை.

ஆனால் முன்னணி நடிகைகள் சிலருக்கு கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 10 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் இருந்தாலும் திரிஷா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் ரஜினியுடன் ஜோடி போட முடியாத நிலையில் எமி ஜாக்ஸனுக்கு 2. 0 படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அதில் எமி பங்கேற்றார்.

இந்தியில் முன்னணி நடிகராக விளங்கும் சல்மான்கானுடன் நடிக்க வேண்டும் என்று எமி அடிக்கடி ஆசையை வெளிப்படுத்தி வந்தார்.

அதற்கான வாய்ப்பு அமையவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கு வந்த செல்போன் அழைப்பை கண்டு இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

போனில் அழைத்தது சல்மான். தான் நடிக்கும் விளம்பர படமொன்றில் இணைந்து நடிக்க வேண்டும் என்று எமியிடம் அவர் கேட்டார்.

சந்தோஷத்தில் ஆழ்ந்த எமி உடனே ஓ. கே சொல்லி படப்பிடிப்பிலும் பங்கேற்றார். தான் எவ்வளவு தீவிர ரசிகை என்பதை அவரிடம் கூறியதுடன் அவரது தோள்மீது கைபோட்டு செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தார்.



.

மூலக்கதை