சிரஞ்சீவிக்கு மகன் தந்த ரூ.20 கோடி சம்பளம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிரஞ்சீவிக்கு மகன் தந்த ரூ.20 கோடி சம்பளம்

நடிப்பிலிருந்து விலகி அரசியலுக்கு நுழைந்த சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு கைதி நம்பர் 150 படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இப்படத்தை மகன் ராம் சரண் தயாரித்தார்.

வி. வி. வினாயக் இயக்கினார். இப்படம் வெளியான ஒரு வாரத்தில் 100 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.

படத் தயாரிப்புக்கு மொத்த பட்ஜெட் செலவு ரூ. 40 கோடி ஆனது. ரிலீஸுக்கு முன்பு 100 கோடிக்கு விற்பனையானது.

இதன் மூலம் ராம் சரணுக்கு ரூ. 60 கோடி லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது. சிரஞ்சீவிக்கு 20 கோடி முதல் 25 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ராம் சரணின் லாபம் மட்டும் ரூ.

35 கோடி அளவில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராம் சரண் அதிகாரபூர்வமான வசூல் குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ள கணக்கில் படத்தின் மொத்த வசூல் 75 கோடியாகவும்.

சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்ட 20 கோடி சம்பளம், இயக்குனர் வினாயக்கிற்கு 10 கோடி சம்பளம் உள்பட மொத்த செலவு 60 கோடி ஆனது. கைக்கு வருமானமாக 15 கோடி கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

இந்த தொகைக்கு வருமான வரி கட்டும்படி அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை