உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி கோரி பிசிசிஐ தலைவருக்கு ஸ்ரீசாந்த் கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி கோரி பிசிசிஐ தலைவருக்கு ஸ்ரீசாந்த் கடிதம்

எர்ணாகுளம்: கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித்சண்டிலா ஆகிய 3 பேருக்கும் சர்வதேச போட்டிகளில் விளையாடபிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. சூதாட்ட புகாரில் இருந்து ஸ்ரீசாந்தை கோர்ட் விடுவித்தபோதிலும் அவருக்கு போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதி அளிக்க வில்லை. இந்நிலையில், நாளை  எர்ணாகுளம் கிரிக்கெட் கிளப் சார்பில் 2 நாள் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் பிசிசிஐ விதியை மீறி செயல்பட முடியாது என கிரிக்கெட் கிளப் அறிவித்து விட்டது.

தடையில்லா சான்று பெற்று வருமாறு ஸ்ரீசாந்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐக்கு தலைமை வகிக்கும் வினோத்ராய்க்கு ஸ்ரீசாந்த் அனுமதிகோரி கடிதம் அனுப்பி உள்ளார்.

டெல்லி நீதிமன்றம் என்னை வழக்கில் இருந்து விடுவித்து விட்டது, அதனால் தடையில்லா சான்று தேவையில்லை என்ற தகவலை அவர் எர்ணாகுளம் கிரிக்கெட் கிளப்பிடம் கூறி வருகிறார். இதனால் போட்டியில் ஸ்ரீசாந்தை பங்கேற்க செய்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் கிரிக்கெட் கிளப் உள்ளது.

விளையாட்டில் பங்கேற்க செய்யாமல் தன்னை புறக்கணிப்பது பயங்கரவாதத்தை விட மோசமானது என ஸ்ரீசாந்த் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை