இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் ஆஸி. மாஜி வீரர் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் ஆஸி. மாஜி வீரர் பாராட்டு

மும்பை: இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்துள்ளது.

தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் மோதும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் பற்றி ஆஸி. யைச் சேர்ந்த 65 வயதான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோட்னிஹோக் அளித்துள்ள பேட்டி:  ஆஸி.

அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், வேகப்பந்து வீச்சு தான் முக்கிய பங்கு வகிக்கும். ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோர் தாக்குதல் நடத்துவார்கள்.

கடந்த ஆண்டில்இலங்கை தொடரில் ஸ்டார்க் 3 டெஸ்ட்டில் 24 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவரால்  இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும்.

நாதன் லியோன் இந்தியாவில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஆஸி.

அணி 2 சுழல், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும். இந்திய அணியில் உமேஷ் யாதவ் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

இவர் ஆஸி. யில் விளையாடி இருந்தால் 150க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றி இருப்பார். ஆனால் இந்திய மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு என்றுமே ஏற்றதாக இருந்ததில்லை.

ஆஸி. வீரர்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை.

அவர்களுக்கு அஸ்வின் கடும் சவாலாக இருப்பார்.   இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ரோட்னி ஹோக் ஆஸி. அணிக்காக 38 டெஸ்ட் மற்றும் 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை