மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி தகுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி தகுதி

கொழும்பு: 11வது 50 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஏற்கனவே 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்யதகுதி சுற்று போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.

லீக் ஆட்டங்கள் முடிவில் ஏ- பிரிவில் இருந்து இந்தியா, இலங்கை, அயர்லாந்து, பி- பிரிவில் தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் சூப்பர் 6  சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும், எதிர் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம்  50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்மட்டுமே எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய இந்தியா 33. 3 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வென்றிருந்ததால் 8 புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் இதன் மூலம் உலக கோப்பை போட்டிக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது.

நாளை  நடக்கும் சூப்பர் 6 சுற்றின் கடைசி ஆட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான், அயர்லாந்து-தென்ஆப்பிரிக்கா, இலங்கை-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

.

மூலக்கதை