எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பினார் அதிமுக எம்எல்ஏ

PARIS TAMIL  PARIS TAMIL
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பினார் அதிமுக எம்எல்ஏ

தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாக பிளவுபட்டு உள்ளது. இந்த நிலையில், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, புதிய முதல்-அமைச்சராக நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடப்பாடி பழனிசாமியை கவர்னர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார்.

அதன்படி எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) சட்டசபையில் தனது அரசுக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.
 
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இல்லம் திரும்பினார். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு 122 ஆனது. கட்சியின் தலைமை பிடிக்கவில்லை என்றும் ஒதுக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தது தவறு எனவும் அருண் குமார் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார். .கோவை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை