நாட்டின் பால் உற்­பத்தி 10.54 கோடி டன்­னாக உயர்வு

தினமலர்  தினமலர்
நாட்டின் பால் உற்­பத்தி 10.54 கோடி டன்­னாக உயர்வு

புது­டில்லி : நடப்­பாண்டில், நாட்டின் பால் உற்­பத்தி, 10.54 கோடி டன்னை எட்­டி­யுள்­ள­தாக, மத்­திய வேளாண் துறை மதிப்­பிட்­டுள்­ளது.
சர்­வ­தேச அளவில், பால் உற்­பத்­தியில், இந்­தியா முன்­ன­ணியில் உள்­ளது. நாட்டில், உ.பி., – ராஜஸ்தான், ம.பி., – குஜராத், ஆந்­திரா ஆகிய மாநி­லங்கள், அதி­க­ளவில் பால் உற்­பத்தி செய்­கின்­றன. நடப்பு பரு­வத்தில், இது­வரை, நாட்டின் பால் உற்­பத்தி, 10.54 கோடி டன்னை எட்­டி­யுள்­ள­தாக, மத்­திய வேளாண் துறை மதிப்­பீடு செய்­துள்­ளது.
இது­ கு­றித்து, வேளாண் துறை அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: நடப்பு பரு­வத்தில், 16.37 கோடி டன் பால் உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. முந்­தைய பரு­வத்தில், 15.55 கோடி டன் பால் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. நடப்பு பரு­வத்தில், இது­வரை, பால் உற்­பத்தி, 10.54 கோடி டன்னை எட்­டி­யுள்­ளது. கடந்த பரு­வத்தை விட, நடப்பு பரு­வத்தில், பால் உற்­பத்தி நன்கு உள்­ளது. நாட்டில், முட்டை உற்­பத்­தியில், தமி­ழகம், ஆந்­திரா, தெலுங்­கானா, மேற்கு வங்கம், ஹரி­யானா ஆகிய மாநி­லங்கள், முன்­ன­ணியில் உள்­ளன. நடப்பு பரு­வத்தில், 5,500 கோடி முட்­டைகள் உற்­பத்தி செய்ய திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அதில், தற்­போது வரை, 2,909 கோடி முட்­டைகள் உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை