ரயிலில் குழந்­தை­க­ளுக்கு பால்; ரயில் யாத்ரி நிறு­வனம் அறி­முகம்

தினமலர்  தினமலர்
ரயிலில் குழந்­தை­க­ளுக்கு பால்; ரயில் யாத்ரி நிறு­வனம் அறி­முகம்

மும்பை : ரயில் யாத்ரி டாட் இன் நிறு­வனம், ரயில் பய­ணத்தின் போது, பய­ணி­களின் குழந்­தை­க­ளுக்கு, சூடான பாலை வினி­யோகம் செய்யும் சேவையை துவங்கி உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் நிர்­வாக இயக்­குனர் மனிஷ் ரதி கூறி­ய­தா­வது: ரயில் யாத்ரி, ‘ஆப்’ மூலம், பால் ஆர்டர் செய்­யலாம். அதன்பின், சூடான, சுகா­தா­ர­மான பால் பிரத்­யேக முறையில் அடைக்­கப்­பட்டு, அனு­மதி பெற்ற ரயில் நிலை­யங்கள் வாயி­லாக வினி­யோகம் செய்­யப்­படும். இந்த சேவையில், பய­ணி­க­ளுக்கு, நேர­டி­யா­கவே, அவர்கள் இருக்கும் இடத்­திற்கு வந்து பால் வழங்­கப்­படும். ரயிலில் இருந்து இறங்க வேண்­டிய அவ­சியம் இல்லை.
வழக்­க­மாக, ரயிலில் கைக் குழந்­தை­யுடன், பெற்றோர் பய­ணிக்கும் போது, பல இன்­னல்­களை சந்­திக்க நேரி­டு­கி­றது. சிலர், ரயில் தாம­தத்­தாலும், ஞாபக மற­தி­யாலும், குழந்­தை­களின் உணவுப் பொருட்­களை மறந்து விடு­கின்­றனர். எங்­களின் இந்த முயற்சி, நிச்­ச­ய­மாக, அவர்­க­ளுக்கு உத­வி­க­ர­மாக இருக்கும் என, நம்­பு­கிறோம். ஆய்­வொன்றில், 80 சத­வீ­தத்­திற்கும் மேற்­பட்ட ரயில்­களில், குழந்­தை­க­ளுக்­கான பால் உள்­ளிட்ட, உணவுப் பொருட்கள் கிடைப்­ப­தில்லை என, தெரிய வந்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை