பண மதிப்பு நீக்­கத்தால் பெப்ஸி விற்­பனை பாதிப்பு

தினமலர்  தினமலர்
பண மதிப்பு நீக்­கத்தால் பெப்ஸி விற்­பனை பாதிப்பு

நியூயார்க் : ‘‘கடந்த, 2016 அக்., – டிச., வரை­யி­லான, நான்­கா­வது காலாண்டில், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், பெப்ஸி இந்­தியா நிறு­வ­னத்தின் விற்­ப­னையில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது,’’ என, பெப்­ஸிகோ நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி, இந்­திரா நுாயி தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் பேசி­ய­தா­வது: நாட்டில், 80 சத­வீத உயர் மதிப்பு கரன்­சி­களை திரும்பப் பெற்று, புதிய கரன்­சி­களை புழக்­கத்தில் விடு­வது என்­பது, சாதா­ரண பணி அல்ல. இந்த திட்­டத்தால், பணத் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு, மக்­களின் தேவை குறைந்­தது. அதன் கார­ண­மாக, பெப்ஸி குளிர்­பா­னங்கள், நொறுக்குத் தீனிகள் ஆகி­ய­வற்றின் விற்­பனை பாதிக்­கப்­பட்­டது. இதன் தாக்­கத்தால், நிறு­வ­னத்தின் இந்­திய பிரிவின் வருவாய், நான்­கா­வது காலாண்டில் குறைந்­தது. தற்­போது, நாட்டில் பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்­துள்­ளது. எனினும், பண மதிப்பு நீக்­கத்தால் ஏற்­பட்ட தாக்கம் முற்­றி­லு­மாக நீங்­க­வில்லை.
இயல்பு நிலை மெல்ல திரும்பி வரு­வதால், மக்­களின் நுகர்வு அதி­க­ரிக்கத் துவங்­கி­யுள்­ளது. இந்­தாண்டு ஜூன் மாதத்­திற்குள், இயல்பு நிலை திரும்பி விடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை தொடர்ந்து, நிறு­வ­னத்தின் விற்­பனை, வழக்கம் போல சூடு­பி­டிக்கும். கடந்த நான்­கா­வது காலாண்டில், பெப்­ஸிகோ நிறு­வ­னத்தின் நிகர வருவாய், 5 சத­வீதம் உயர்ந்து, 1,951 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, 2015ம் ஆண்டு, இதே காலாண்டில், 1,858 கோடி டால­ராக இருந்­தது. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை