பொது துறை வங்­கி­களை காப்­பாற்ற ‘வாராக்­கடன் வங்கி’ அமைக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி ஆத­ரவு

தினமலர்  தினமலர்
பொது துறை வங்­கி­களை காப்­பாற்ற ‘வாராக்­கடன் வங்கி’ அமைக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி ஆத­ரவு

மும்பை : வசூ­லா­காத கடன்­களால், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பை தடுக்க, ‘தேசிய வாராக்­கடன் வங்கி’ அமைக்கும் கொள்­கைக்கு, ரிசர்வ் வங்கி ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.
கடந்த, 2016 ஜூன் நில­வ­ரப்­படி, பொது மற்றும் தனியார் துறை வங்­கி­களின் வாராக்­கடன், 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக உள்­ளது. இதில், பொதுத் துறை வங்­கி­களின், 20 கணக்­கு­களில் மட்டும், 1.54 லட்சம் கோடி ரூபாய், வசூ­லிக்க வேண்­டி உள்­ளது.
திணறல்ரிசர்வ் வங்கி, இரு ஆண்­டு ­க­ளுக்கு முன் பிறப்­பித்த உத்­த­ரவில், ‘அனைத்து வங்­கி­களும், வாராக்­க­டன்­களை, 2017 மார்ச் இறு­திக்குள் சீர­மைத்து, நிதி நிலையை மேம்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்’ என, தெரி­வித்­தி­ருந்­தது. எனினும், வங்­கிகள், வாராக்­க­டன்­க­ளுக்கு தீர்வு காண முடி­யாமல் திணறி வரு­கின்­றன. இந்­நி­லையில், மத்­திய நிதி­ய­மைச்­சகம், சமீ­பத்தில் பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டது. அதில், ‘தேசிய வாராக்­கடன் வங்கி’ என்ற அமைப்பை ஏற்­ப­டுத்தி, அதில் வங்­கி­களின் வசூ­லா­காத கடன்­களை மாற்றிக் கொள்­ளலாம் என, தலைமை பொரு­ளா­தார ஆலோ­சகர் அரவிந்த் சுப்­ர­ம­ணியன் பரிந்­து­ரைத்­தி­ருந்தார்.
இந்த திட்டம் அம­லானால், பொதுத் துறை வங்­கிகள், சர்­வ­தேச, ‘பேசல் 3’ விதி­மு­றைப்­படி, அவற்றின் பங்கு மூல­த­னத்தை உயர்த்தி, நிர்­ண­யிக்­கப்­பட்ட, மூல­தன ஆதாய விகி­தத்தை பரா­ம­ரிக்க வழி ஏற்­படும் என, கூறப்­ப­டு­கி­றது. தற்­போது, வங்­கிகள், அவற்றின் வாராக்­க­டனை, தள்­ளு­படி விலையில், சொத்து மறு­சீ­ர­மைப்பு நிறு­வ­னங்­க­ளிடம் விற்­பனை செய்­கின்­றன. அந்­நி­று­வ­னங்கள், கடனை வசூ­லித்துக் கொள்­கின்­றன.
ஆதரவு‘தேசிய வாராக்­கடன் வங்­கி’­யிடம், வாராக்­க­டன்­களை மாற்றும் போது, அவை, சந்தை விலைக்கு வழங்­கப்­படும் என்­பதால், வங்­கி­களின் இழப்பு குறையும். மேலும், வங்­கிகள், கடன் வழங்­கு­வதை மட்­டுமே இலக்­காக கொண்டு, திறம்­பட செயல்­பட முடியும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இது குறித்து, ரிசர்வ் வங்­கியின், துணை கவர்­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள விரால் ஆச்­சார்யா கூறி­ய­தா­வது:வங்­கி­களின் வசூ­லா­காத கடன், பெரிய பிரச்­னை­யாக உள்­ளதால், வாராக்­கடன் வங்கி அமைப்­பது உள்­ளிட்ட, பல­வ­கை­யான தீர்­வு­களை ஆராய்­வதில் தவ­றில்லை. வாராக்­கடன் விற்­ப­னையில், வங்­கி­க­ளுக்கு, உரிய விலை கிடைக்க வேண்டும். அதற்­கான விதி­மு­றை­களை, தெளி­வாக உரு­வாக்­கினால் பலன் கிடைக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.
ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி கவர்­ன­ராக இருந்த போது, வாராக்­கடன் வங்கி அமைக்கும் கொள்­கைக்கு ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை; தற்­போது, உர்ஜித் படேல் தலை­மை­யி­லான, ரிசர்வ் வங்­கியின் துணை கவர்னர், இக்­கொள்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
வங்கித் துறை, வாராக்­கடன் பிரச்­னையில் இருந்து விடு­பட வேண்டும். அப்­போது தான், சிறிய தொழில்­க­ளுக்கும், பிற துறை­க­ளுக்கும் தாரா­ள­மாக கடன் வழங்க முடியும். இதற்கு, ‘தேசிய வாராக்­கடன் வங்கி’ உதவும்.-உதய் கோட்டக்,தலைவர் , கோட்டக் மகிந்­திரா பேங்க்

மூலக்கதை