வங்கதேசத்தைவீழ்த்தியதுஇந்தியா

தினகரன்  தினகரன்

கொழும்பு: ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்றின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. கொழும்பு, என்சிசி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. ஷர்மின் 35, பர்கான் 50, நிகர் சுல்தானா 18 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் மான்சி ஜோஷி 3, தேவிகா 2, ஷிகா, ராஜேஸ்வரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 33.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து எளிதாக வென்றது. தீப்தி ஷர்மா 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மோனா மேஷ்ராம் 78 ரன் (92 பந்து, 12 பவுண்டரி), கேப்டன் மித்தாலி ராஜ் 73 ரன் (87 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 2 புள்ளிகள் பெற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா 4 லீக் ஆட்டங்களில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தென் ஆப்ரிக்கா வெற்றி: இலங்கை அணியுடன் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் போட்டியில் தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்; தென் ஆப்ரிக்கா 36.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 145. மற்றொரு சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 86 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் 50 ஓவரில் 271/5; அயர்லாந்து 48.5 ஓவரில் 185 ரன் ஆல் அவுட்.

மூலக்கதை