சசிகலாவிடம் விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

PARIS TAMIL  PARIS TAMIL
சசிகலாவிடம் விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சிலருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க் கள் பி.ஆர்.சுந்தரம், அசோக்குமார், சத்தியபாமா, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்பட 12 பேர் டெல்லியில் நேற்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அளித்த புகாருக்கு விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

விதிகளுக்கு புறம்பாக சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கபட்டதாக புகார் எழுந்தது. பன்னீர் செல்வம் தரப்பு புகாருக்கு சசிகலா வரும் 28-ம்தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்படுகிறது. பதில் தரவில்லை எனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

மூலக்கதை