கூவத்தூர் கும்மாளத்தில் தாயின் இறுதிச்சடங்கிற்குக் கூட செல்லாத எம்.எல்.ஏ

PARIS TAMIL  PARIS TAMIL
கூவத்தூர் கும்மாளத்தில் தாயின் இறுதிச்சடங்கிற்குக் கூட செல்லாத எம்.எல்.ஏ

சசிகலா அணி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து கூவத்தூரில் கடந்த 10 நாட்களாக இருந்துவரும் திருப்பூர் தொகுதி எம்.எல்.ஏ தனது தாயின் இருதிச்சடங்கிற்குக் கூட செல்லாததால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக  இருப்பவர் கே.என்.விஜயகுமார்.
விஜயகுமாரின் தந்தை கருப்புசாமிக்கு 2 மனைவிகள். இதில் முதல் தாரத்தின் மகன் விஜயகுமார். 2-வது மனைவி அங்காத்தாளுக்கு (80) ஒரு மகன் உள்ளார்.

விஜயகுமாரரின் தாய் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். கருப்புசாமியும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அங்காத்தாள் திருப்பூரை அடுத்த வெங்கமேட்டில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்து கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்தார் விஜயகுமார்.

இந்நிலையில், நேற்று மாலை விஜயகுமாரின் சித்தி அங்காத்தாள் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனை கூவத்தூரில் உள்ள விஜயகுமாருக்கு உறவினர்கள் செல்போனில் தகவல் கொடுத்தனர். சில நிமிடங்களில் அவரது போன் அணைக்கப்பட்டது. அவரது இந்த செயல் உறவினர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது.

இரண்டு நாட்களாக காத்திருந்து அவர் வராததையடுத்து அங்காத்தாளுக்கு விஜயகுமாரின் சகோதரர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மூலக்கதை