பரிஸ் - ஊழலுக்கு எதிராக கை கோர்க்கும் இளைஞர்கள்!! - சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்??

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  ஊழலுக்கு எதிராக கை கோர்க்கும் இளைஞர்கள்!!  சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்??

ஊழலுக்கு எதிராக சில ஆயிரம் இளைஞர்கள் சுதந்திர சதுக்கத்துக்கு ( place de la république ) முன்பாக கூட இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
 
எந்த அரசியல் அடையாளமும் இல்லாமல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக புகைப்படக்கலைஞர் Vincent Galtier தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் ஊழல் செய்வதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் தன்னிச்சையாக முன்னெடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கும் போது, 'முதலில் 40, 50 பேர் தான் வருவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இதுவரையில் 6,400 பேர் வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் François Fillon ஊடகங்களுக்கு பேட்டி வழங்கும் போதே இந்த யோசனை தோன்றியது. அதை தொடர்ந்து தான் இதை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தேன்' என புகைப்படக்கலைஞர் Vincent Galtier மேலும் தெரிவித்தார். 
 
வரும் ஞாயிற்றுக்கிழமை பரிசின் சுதந்திர சதுக்கத்துக்கு முன்பாக மாலை 3 மணிமுதல் அமைதியான முறையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Lyon, Marseille, Bordeaux, Toulouse, Rennes போன்ற நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்தந்த நகரங்களிலும்  இடம்பெற உள்ளது என தெரிவித்துள்ளார்கள் இந்த குழுவினர்.

மூலக்கதை