பாக்யராஜ் - மாதவன் - ஸ்ரீபிரியா கோபம்; ஜனகூட்டம் துரத்தையில் ஓடாவிட்டால் ஜனமாவது? நாயகமாவது? கமல் ஆவேசம்; தமிழக அரசியல் பற்றி நட்சத்திரங்கள் தடாலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாக்யராஜ்  மாதவன்  ஸ்ரீபிரியா கோபம்; ஜனகூட்டம் துரத்தையில் ஓடாவிட்டால் ஜனமாவது? நாயகமாவது? கமல் ஆவேசம்; தமிழக அரசியல் பற்றி நட்சத்திரங்கள் தடாலடி

சினிமாவில் வரும் கிளைமாக்ஸ் திருப்பங்களைவிட சமீபகாலமாக தமிழக அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து நடிகர், நடிகைகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொது மக்கள், கட்சி தொண்டர்கள், அதிமுக நிர்வாகிகள் பலரின் ஆதரவு இருந்தபோதும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பலம் இல்லாததால் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். ஆட்சி அமைக்க  நடக்கும் போட்டிகள், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர், நடிகைகள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.



அதன் விவரம்: கமல்ஹாசன்: திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வேண்டும். நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது? என்றால் ஜனமாவது நாயகமாவது.

107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட 104 செயற்கை கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர். வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழ், வாழிய பாரத  மணித்திருநாடு.

டைரக்டர் கே. பாக்யராஜ்: சீட்டு கொடுத்தவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்கும் நீ, அந்த சீட்டை எம். எல். ஏ. பதவியாக மாற்றிய ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக  இருக்க வேண்டும் என்று நினைக்ககூடாதா?

மாதவன்: நம்பிக்கையையும் பழைய இயல்பு வாழ்க்கையையும் கொண்டு வருவதற்கான நேரம் இது.

தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையை மீட்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகவும் இது இருக்கிறது. சித்தார்த்: நமது நாட்டில் பல அரசியல்வாதிகள் நூறுகோடி, ஆயிரம் கோடி என்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்கள்.

அவர்களில் சிலர்  மட்டுமே ஊழல் செய்ததற்கான விலையை கொடுக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக நம்மால் சண்டை போட முடியும்.

ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று நாம்  கட்டாயப்படுத்தி கேட்க வேண்டும். நீங்கள்(மக்கள்) மாற்றமாக இருப்பதற்கு உறுதி  எடுங்கள்.



நடிகை ஸ்ரீபிரியா: அடுத்த 15 நாட்கள் தங்கப்போகும் அடுத்த ஹாலிடே ஸ்பாட் எங்கு இருக்கிறதோ? தேசிய செய்தி சேனல்கள் தமிழக பிரச்னை முடிந்துவிட்டதாக தெரிவித்து வருகின்றன. பிரச்னையே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது என்பது அவற்றுக்கு தெரியவில்லை.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்எல்ஏக்களிடம் மக்கள் கேட்க வேண்டும்.

.

மூலக்கதை