புது ஹீரோயினுடன் தமிழுக்கு வரும் இயக்குனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புது ஹீரோயினுடன் தமிழுக்கு வரும் இயக்குனர்

பிரியதர்ஷன், ஐ. வி. சசி, ஷாஜி கைலாஷ், பாசில் என மல்லுவுட் இயக்குனர்கள் கோலிவுட் வந்திருக்கின்றனர். அந்த வரிசையில் மற்றொரு மல்லுவுட் இயக்குனர் ஹாபிஸ் இஸ்மாயில் ‘கோம்பே’ படம் மூலம் தமிழுக்கு வருவதுடன் வில்லனாகவும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆனது. படம் பற்றி இயக்குனர் கூறியது: எனக்கு தமிழ் சரியாக வராவிட்டாலும் சினிமா தெரியும்.

மலையாளத்தில் 3 படம் இயக்கி உள்ளேன். நல்ல கதையை தமிழ் ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.

அந்த நம்பிக்கையில்தான் இப்படம் இயக்கி உள்ளேன். தேங்காயில் உள்ள தேங்காயையும், நீரையும் எடுத்துவிட்டு கீழே வீசியெறியப்படும் வெறும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள்.

மனித வாழ்க்கையும் அப்படித்தான். இதுதான் படத்தின் அடி நாதம்.

தேனியில் வாழும் ஒரு இளைஞன் காசுக்காக எதையும் செய்ய துணிகிறான். அவனது வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறார்.

அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகளை கூறுகிறது படம். புதுமுகங்கள் சார்லஸ் ஹீரோ, தீர்த்தா ஹீரோயின்.

அனூப் ராக்வெல், அபிஜித் ஜான்சன், டென்னிஸ்  ஜோசப் இசை அமைக்கின்றனர். ஹரிஸ் இஸ்மாயில், பினு ஆப்ரகாம் உடன் இணைந்து தயாரித்திருக்கிறேன்.


.

மூலக்கதை