உங்களால் நம்ப முடிகிறதா? வருமான வரி வராத அளவுக்கு 1141 எம்பி, எம்எல்ஏக்கள் ஏழையாம் - வேட்புமனு ஆய்வில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உங்களால் நம்ப முடிகிறதா? வருமான வரி வராத அளவுக்கு 1141 எம்பி, எம்எல்ஏக்கள் ஏழையாம்  வேட்புமனு ஆய்வில் தகவல்

புதுடெல்லி- நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்களில் 1141 பேர் வருமான வரியே வராத அளவுக்கு குறைந்த வருமானம் உடையவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? அவர்களின் வேட்பு மனுக்களில் அளித்த பிரமாண பத்திரங்களில் அப்படித்தான் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தாக்கல் செய்திருந்த வருமான வரி கணக்குகளில் இருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் பாஜ, காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பலரும் தங்கள் ஆண்டு வருவாய் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவு என தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட 4 ஆயிரத்து 848 பேரின் வேட்புமனுவுடன் இணைந்த பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

சுமார் 35 சதவீதம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 2. 5 லட்சத்திற்கும் குறைவு என்றும், சுமார் 40 சதவீத எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ரூ. 2. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களாகவும் தெரிவித்திருந்தனர்.

இவர்களில் மொத்தம் 1141 பேர் அதாவது சுமார் 24 சதவீதம் பேர், வருமானவரி விலக்குகளை பெற்று, வரி இல்லாதவாறு செய்திருக்கிறார்கள். அதே போல், 62 சதவீதம் எம்பிக்கள், எம்எல்ஏக்களின் குடும்பத்தினரின் வருவாய் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகும்.

குடும்பத்தினரையும் சேர்த்து ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் கொண்டவர்களாக 1843 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளனர். குடும்ப வருவாய் ரூ. 1 கோடிக்கும் அதிகம் கொண்டவர்களாக 106 பேர் உள்ளனர்.

10 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் கொண்ட 1236 பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர் 1676 பேரின் வருவாய் ரூ. 2. 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளதாக தெரிவித்திருப்பதால் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் லோக்சபா எம்பிக்களில் 63 சதவீதம் பேரும், ராஜ்யசபா எம்பிக்களில் 13 சதவீதம் பேரும் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான வருவாய் உடையவர்கள்.   உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் 80 சதவீதத்திற்கும் அதிகமான எம்எல்ஏக்களின் வருவாய் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆகியோரின் குடும்ப வருவாய் ரூ. 2 கோடிக்கும் அதிகமாகும்.

28 சதவீதம் பேரின் வருவாய் ரூ. 5 கோடிக்கும் அதிகமாகும்.

70 சதவீதம் பேரின் வருவாய் ரூ. 1 கோடிக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை