கனடாவுக்கு இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கனடாவுக்கு இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமனம்

புதுடெல்லி- கனடாவுக்கான இந்தியத் தூதராக அருண் குமார் சாஹு பதவி வகித்து வந்தார். தற்போது, அவருக்கு பதிலாக, புதிய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்த ஸ்வரூப், அதற்கு முன்பு அந்தத் துறையின் ஐ. நா. பிரிவு கூடுதல் செயலராகவும் பதவி வகித்திருக்கிறார். துருக்கி, அமெரிக்கா, எத்தியோப்பியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் தூதராக பணியாற்றிய அனுபவம் உடையவர்.   கடந்த 1985ம் ஆண்டில் இந்திய வெளியுறவு துறையில் அதிகாரியாக சேர்ந்து பணியை துவக்கியவர்.

இவருக்கு அடுத்தபடியாக தற்போது இணை செயலாளராக உள்ள கோபால் பக்லே, புதிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.   கோபால் பக்லே தற்போது பாகிஸ்தான், இரான், ஆப்கன் பிரிவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக உள்ளார்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பு உள்ளிட்ட எட்டு ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம், விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை