மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் - இரோம் சர்மிளா மனு தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்  இரோம் சர்மிளா மனு தாக்கல்

இம்பால்- மணிப்பூரில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூரில் அமலில் உள்ள சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 19 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா.

கடந்த ஆண்டு போராட்டத்தை முடித்து கொண்ட இவர், தேர்தல் களத்தில் குதித்துள்ளார். அதிலும் முதல்வர் இபோபி சிங்கை நேரடியாக எதிர்கொள்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் இபோபி சிங்  3 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். தற்போது 4வது முறையாக முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளார்.

தவுபால் சட்டசபை தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இம்முறை அவரை எதிர்த்து இரோம் சர்மிளா களத்தில் குதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனது புதிய கட்சியான மக்கள் எழுச்சி நீதி முன்னணி சார்பில் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 20 கிமீ தூரம் சைக்கிளில் ஆதரவாளர்களுடன் பேரணியாக நேற்று சென்ற இரோம் சர்மிளா, இபோபி சிங்கை எதிர்த்து அதே தொகுதியில் மனு தாக்கல் செய்தார்.

.

மூலக்கதை