கொழும்பு சென்ற மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பு சென்ற மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்!

 மலேஷியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமானம் தொழில்நுட்ப கோளாறு மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

 
 MH179 என்ற விமானமே தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, மீண்டும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 
 
நேற்றிரவு 10.10 மணியளவில் புறப்பட்ட குறித்த விமானம் கொழும்பை வந்தடைந்த போதும், மீண்டும் இன்று அதிகாலை 1.50 மணியளவில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 
 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓடுபாதை நிர்மாணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விமான நிலைய செயற்பாடுகளின் நேர எல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதன்காரணமாக கட்டுநாயக்கவில் தரையிறக்க முடியாமல், MH179 விமானம் மீண்டும் மலேசியாவுக்கு திருப்பப்பட்டுள்ளது. 
 
குறித்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு அருகில் தங்கியிருக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் தரையிறங்கியுள்ள விமானம் இன்று மாலை கொழும்பை வந்தடையும் என கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 
 
விமான பயணத்தில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மலேசிய எயார்லைன்ஸ் நிறுவனம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
 

மூலக்கதை