தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை

தினமலர்  தினமலர்
தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை

சென்னை : கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம், வெள்ளி விலையில் நேற்று முதல் விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம், வெள்ளி விலையில் இன்றும் (பிப்ரவரி 17) விலை ஏற்றமே தொடர்கிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.64ம், பார்வெள்ளி விலை ரூ.40ம் உயர்ந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.8 அதிகரித்து ரூ.2839 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.2988 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,712 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் உயர்ந்து ரூ.46.60 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.40 உயர்ந்து ரூ.43,520 ஆகவும் உள்ளது.

மூலக்கதை