அறி­வுசார் மென்­பொருள் உரு­வாக்­கத்தில் கவனம் செலுத்த வேண்டும்: ஐ.பி.எம்.,

தினமலர்  தினமலர்
அறி­வுசார் மென்­பொருள் உரு­வாக்­கத்தில் கவனம் செலுத்த வேண்டும்: ஐ.பி.எம்.,

மும்பை: சர்­வ­தேச தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான, ஐ.பி.எம்.,மின் தலைவர் கின்னி ரோமட்டி கூறி­ய­தா­வது: இந்­தி­யாவில், சாப்ட்வேர் வல்­லு­னர்கள் அதிகம் உள்­ளனர். அதனால், மனி­தர்­களை போல, பகுத்­த­றிந்து செயல்­படும், சாப்ட்­வேர்­களை உரு­வாக்­கு ­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்டும். அதில் தான், இந்­தி­யாவின் எதிர்­காலம் அடங்­கி­ உள்­ளது. வரும், 2020ல், உல­கி­லேயே, அதிக அளவில், சாப்ட்வேர் வல்­லு­னர்­களைக் கொண்ட நாடாக, இந்­தியா உரு­வெ­டுக்கும். தற்­போது, 30 லட்­சத்­திற்கும் அதி­க­மான சாப்ட்வேர் புரோ­கி­ரா­மர்கள், குறைந்­த­பட்சம், 10 சத­வீத, ‘ஆப்’­களை உரு­வாக்­கு­கின்­றனர்.
அறி­வுசார் சாப்ட்­வேர்­களை உரு­வாக்­கு­வ­தற்கு வச­தி­யாக, இந்­தி­யாவும், மின்­னணு தொழில்­நுட்ப பயன்­பாட்­டிற்கு வேக­மாக மாறி வரு­கி­றது. ஆகவே, எதிர்­கா­லத்­திற்­கான அறி­வுசார் சாப்ட்வேர் உரு­வாக்­கத்தில், வேறு எந்த நாட்­டையும் விட, இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாக இருக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை