சிறு தொழில் முனை­வோ­ருக்­காக அனைத்து மாநி­லங்­க­ளிலும் காதி கிராமம்

தினமலர்  தினமலர்
சிறு தொழில் முனை­வோ­ருக்­காக அனைத்து மாநி­லங்­க­ளிலும் காதி கிராமம்

ஆம­தாபாத்: கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம், ஒவ்­வொரு மாநி­லங்­க­ளிலும், தலா, ஐந்து காதி கிரா­மங்­களை துவக்க போவ­தாக அறி­வித்­துள்­ளது.
உள்­நாட்டில், குடிசை தொழில், குறுந்தொழில்­களை ஊக்­கு­விக்க, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் செயல்­பட்டு வரு­கி­றது. இந்­நி­லையில், அனைத்து மாநி­லங்­க­ளிலும், தலா, ஐந்து காதி கிரா­மங்­களை அமைக்க போவ­தாக, அந்த ஆணையம் அறி­வித்­துள்­ளது.
இது ­கு­றித்து, ஆணைய அதி­காரி, வி.கே.சக்­ஸேனா கூறி­ய­தா­வது: கிரா­மங்­களில் உள்ள சிறு தொழில் முனை­வோரின் பொரு­ளா­தார நிலையை மேம்­ப­டுத்த, பல்­வேறு திட்­டங்கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதன்­படி, தற்­போது, ஒவ்­வொரு மாநி­லத்­திலும், ஐந்து காதி கிரா­மங்கள் துவக்­கப்­பட உள்ளன. அங்கு, மெழு­கு­வர்த்தி, பேக்­கரி பொருட்கள் போன்­ற­வற்றை தயா­ரிப்­பது, சந்­தைப்­ப­டுத்­து­வது குறித்து பயிற்­சியும் அளிக்­கப்­படும். கடந்த நிதி­யாண்டில், 1,510 கோடி ரூபாய் மதிப்­பி­லான, காதி பொருட்கள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. இது, நடப்­பாண்டில், 2,000 கோடி ரூபா­யா­கவும், அடுத்த இரண்டு ஆண்­டு­களில், 5,000 கோடி ரூபா­யா­கவும் அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை