இந்­தி­யாவின் ஏற்­று­மதி 2,211 கோடி டால­ராக உயர்வு

தினமலர்  தினமலர்
இந்­தி­யாவின் ஏற்­று­மதி 2,211 கோடி டால­ராக உயர்வு

புது­டில்லி: இந்­தி­யாவின் ஏற்­று­மதி, கடந்த ஜன., மாதத்தில், 2,211 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே மாதத்தை விட, 4.32 சத­வீதம் அதி­க­மாகும். இதே மாதத்தில், இறக்­கு­மதி, 3,195 கோடி டால­ராக இருந்­தது. மதிப்­பீட்டு காலத்தில், பெட்­ரோ­லியம் பொருட்கள், பொறி­யியல் சாத­னங்கள், இரும்­புத்­தாது உள்­ளிட்ட பொருட்­களின் ஏற்­று­மதி அதி­க­ரித்­துள்­ளது. இதை­ய­டுத்து, வர்த்­தக பற்­றாக்­குறை, 984 கோடி டாலர் என்­ற­ளவில் உள்­ளது.
கடந்த மாதத்தில், தங்கம் இறக்­கு­மதி, 204 கோடி டால­ராக குறைந்து இருந்­தது. இது, முந்­தைய ஆண்டின், இதே மாதத்தில், 291 கோடி டால­ராக அதி­க­ரித்து இருந்­தது. மத்­திய அரசின் செல்­லாத நோட்டு அறி­விப்பால், தங்கம் இறக்­கு­மதி குறைந்­துள்­ளது. நடப்பு நிதி­யாண்டில், ஏப்., – ஜன., வரை­யி­லான காலத்தில், நாட்டின் ஏற்­று­மதி, 22 ஆயி­ரத்து, 92 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலத்தை விட, 1 சத­வீதம் அதிகம். இதே காலத்தில், வர்த்­தக பற்­றாக்­குறை, 8,638 கோடி டாலர் என்­ற­ளவில் உள்­ளது. இந்­தி­யாவில், அமெ­ரிக்க நாட்­டிற்­கான ஏற்­று­மதி, 2.63 சத­வீதம்; ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடுகள், 5.47 சத­வீதம்; ஜப்பான், 13.43 சத­வீதம் என்­ற­ளவில் உள்­ளது.

மூலக்கதை