பாக்.,கில் தாக்குதல்: 100 பேர் பலி?

தினமலர்  தினமலர்

கராச்சி : பாகிஸ்தானில், மசூதி யில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், 100க்கும் அதிகமானோர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷேவன் நகரில், மசூதி ஒன்றில், நேற்று, மக்கள் பெருமளவு கூடியிருந்தனர்; அப்போது, மக்கள்கூட்டத்தின் மீது, கையெறி குண்டை, ஒருவன் வீசினான்; ஆனால், அது வெடிக்கவில்லை. இதையடுத்து, கூட்டத்துக்குள் புகுந்த அவன், திடீரென, தன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில், 100க்கும் அதிகமானோர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. குண்டு வெடித்த இடத்தில், ஏராளமான உடல்கள் சிதறி கிடக்கின்றன. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்; இவர்களில், பலர்கவலைக்கிடமான நிலை யில் உள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் பயங்கர வாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர், நவாஸ் ஷெரீப் தலைமையில், நேற்று உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஷெரீப், ''பயங்கரவாதத்தை பாகிஸ்தானிலிருந்து வேரோடு அழிப்போம்,'' என்றார். அவர் பேசிய இரண்டு மணி நேரத்தில், சிந்து மாகாணத்தில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை