Gare du Nord நிலையத்தில் - முகத்தினை அடையாளம் காணும் கருவி!!

PARIS TAMIL  PARIS TAMIL
Gare du Nord நிலையத்தில்  முகத்தினை அடையாளம் காணும் கருவி!!

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் Gare du Nord நிலையத்தில் முகத்தினை அடையாளம் காணும் (facial recognition technology) கருவி பொருத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. 
 
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக நிலவும் வேளையில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. ஆனால் இந்த முகத்தினை அடையாளம் காணும் இந்த கருவி, யூரோ-ஸ்டார் தொடரூந்து பயணிகளுக்கான பயணத்தை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யூரோ-ஸ்டார் நிர்வாகி ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது, Gare du Nord நிலையத்தில் இருந்து யூரோ-ஸ்டார் தொடரூந்தில் பயணிக்கும் பயணிகளுக்காக மாத்திரமே இது அமைக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டையும், பயணத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கிலே இது அமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கடந்த யூரோ கிண்ண போட்டிகளின் போது பிரித்தானிய தலைநகரம் இலண்டனின் St. Pancras நிலையத்தில் செயற்பட தொடக்கியிருந்தது. கடந்த எட்டு மாதத்தில் ஐந்து இலட்சம் பேர் இந்த வசதியினை பயன்படுத்தியுள்ளனர்.' என தெரிவித்துள்ளனர். 
 
இதை தொடர்ந்து பெல்ஜிய தலைநகர் Brussels இலும் இந்த கருவியினை பொருத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை