விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

PARIS TAMIL  PARIS TAMIL
விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

 சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. எஞ்சிய படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் நடைபெற இருக்கிறது. அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முதலானோர் நடிக்கும் 'விவேகம்' படத்திற்கு அனிருந்த் இசை அமைத்து வருகிறார்.

 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீஸரை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது.
 
இப்போது 'விவேகம்' படத்தின் ரிலீஸ்தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது சுந்தந்திர தின விடுமுறையை முன்னிட்டு 5 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி 'விவேகம்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அஜித் நடிக்கும் படங்கள் சென்டிமென்டாக வியாழக் கிழமை வெளியாவது வழக்கம். அந்த வரிசையில் 'விவேகம்' படத்தையும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வியாழக் கிழமை அன்று வெளியிட உள்ளனர்.
 
'விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 22-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு மாற்றியதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்த நாள் அன்று விவேகம் படத்தை வெளியிட்டால் அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதாலேயே தேதியை மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.

மூலக்கதை