Emmanuel Macron மற்றும் François Fillonஐ முந்தும் மரீன் லூ பென்! - திசைமாறும் அரசியல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Emmanuel Macron மற்றும் François Fillonஐ முந்தும் மரீன் லூ பென்!  திசைமாறும் அரசியல்!!

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள புதிய கருத்துக்கணிப்பில், முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான Emmanuel Macron மற்றும் François Fillonஐ ஓரம்கட்டிவிட்டு, தேசிய முன்னனி கட்சியின் தலைவரும் வேட்பாளருமாகிய மரீன் லூ பென் முதலிடத்தில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிரபல பத்திரிகையான Le Monde வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பின் படி, மரீன் லூ பென்னே ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் அமோக வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Cevipof-Ipsos-Sopra நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பில், ஜனாதிபதி தேர்தலின் முதற் சுற்றில், மரீன் லூ பென், 25 தொடக்கம் 26 வீதம் வாக்குகள் பெற்று வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து Emmanuel Macron 20 தொடக்கம் 23 வீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், 17.5 தொடக்கம் 18.5 வீத வாக்குகள் வரை பெற்று François Fillon மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவார் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

அதை தொடர்ந்து Benoît Hamon 14 தொடக்கம் 14.5 வீத வாக்குகளும், Jean-Luc Mélenchon11.5 தொடக்கம் 12 வீதம் வரையான வாக்குகளையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் தேசிய முன்னனி கட்சியினரின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்து வருவது வாசகர்கள் அறிந்ததே. அதையே இந்த புதிய கருத்துக்கணிப்பும் உறுதி செய்துள்ளது. 

மூலக்கதை