தமிழகத்தின் 21வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்!

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகத்தின் 21வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்!

 ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமியை  தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

 
இந்த நிகழ்வில் ஆளுநர் வித்யாசகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
 
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையும் பதவிப்பிரமானம் செய்து கொண்டது.
 
அதிமுகாவில் நிலவிய குழப்பத்தையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
 
இந்நிலையில்,தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
 
இந்தப் பதவியேற்பு இடம்பெற்று 15 நாட்களில் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்வில் தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் திராவிட முன்னேற்றக்கழக செயல்தலைவருமான மு.க ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.
 
இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள  எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 31 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
 
 
இதில் பாண்டியராஜன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை தவிற மற்றவர்கள், ஏற்கனவே இருந்த அதே பதவிகளில்  நீடிக்கின்றனர். செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
31 அமைச்சர்கள் முழு பட்டியல்:
 
எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை
செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை
தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு
எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சி துறை
ஜெயக்குமார் - மீன்வளத்துறை
சி.வி. சண்முகம் - சட்டத்துறை
அன்பழகன் - உயர்கல்வி
சரோஜா - சமூக நலத்துறை
எம்.சி சம்பத் - தொழில்துறை
கருப்பண்ணன் - சுற்றுசூழல்
காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்
ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு
விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை
துரைக்கண்ணு - விவசாயத்துறை
கடம்பூர் ராஜூ- செய்தி துறை
உதயகுமார் - வருவாய்த்துறை
வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
வீரமணி - வணிக வரித்துறை
ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை
பெஞ்சமின் - ஊரக தொழில்துறை
நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை
ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை
பாஸ்கரன் -காதித்துறை
சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை
வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை
பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை

மூலக்கதை