உணவு, நடிப்பில் ‘அசைவ’த்துக்கு மாறும் லாவண்யா

தமிழ் முரசு  தமிழ் முரசு
உணவு, நடிப்பில் ‘அசைவ’த்துக்கு மாறும் லாவண்யா

சசிகுமார் ஜோடியாக பிரம்மா படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் நாக சைதன்யா, சர்வானந்த் படங்களில் நடித்து வருகிறார். லாவண்யா சைவ உணவு பிரியர் என்றாலும் ஐதராபாத் சென்றால் பிரியாணி பிரியையாக மாறிவிடுகிறார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது,’நீங்கள் சொல்வது உண்மைதான். நான் சைவ உணவுதான் சாப்பிடுவேன்.

ஆனால் ஐதராபாத் பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும். சிக்கன் பிரியாணி வாங்கி அதிலிருக்கும் சிக்கன் பீஸ்களை தூக்கி எறிந்துவிட்டு குஷ்கா மட்டும் விரும்பி சாப்பிடுவேன்.

ஏனென்றால் வழக்கமான வெஜிடபிள் பிரியாணியைவிட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும் என்பதால் மிகவும் பிடிக்கும். தென்னிந்திய உணவுகள் குறிப்பாக இட்லி, தோசை போன்றவைகளை விரும்பி சாப்பிடுவேன்’ என்றார்.


நடிப்பை பொறுத்தவரையில் கவர்ச்சி காட்டாமல் சைவமாக நடித்து வந்தவர் தற்போது கவர்ச்சி காட்டி அசைவமாக நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

.

மூலக்கதை